சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி. அதற்கு முன்னதாக சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக ‘ஒயிட்’ என்கிற படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது வலிமை திரைப்படம் மூலமாக மீண்டும் தென்னிந்திய திரையுலகம் பக்கம் கவனத்தை திருப்பி உள்ள ஹூமா குரேஷி, வலிமை படத்திற்கும் அதில் தன்னுடைய நடிப்பிற்கும் கிடைத்துவரும் பாராட்டுக்களால் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த அஜித், போனிகபூர், இயக்குனர் வினோத் மூவருக்குமே நன்றி சொல்லிக் கொள்கிறேன். குறிப்பாக அஜித்குமார் ரசிகர்களுக்கு எனது நன்றியை சொல்லியே ஆகவேண்டும்.. அஜித் ரசிகர்களின் அளவற்ற அன்பும் பாசமும் என்னை வியப்படையச் செய்துள்ளது” என கூறியுள்ளார். இது தவிர தற்போது மஹத் ராகவேந்திராவுடன் டபுள் எக்ஸ்எல் என்கிற படத்தில் நடித்து வருகிறார் ஹூமா குரேஷி.