கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் மாரடைப்பால் காலமானது இந்திய திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கன்னட சினிமாவின் முக்கிய தூணாக விளங்கிவரும் நடிகர் ராஜ்குமார் குடும்பத்தில் வாரிசுகளில் ஒருவரான புனித் திறமையான நடிகர் என்பதுடன் சமூக நோக்கில் பல உதவிகளை செய்து வந்த ஒரு நடிகர். இவ்வளவு குறைந்த வயதிலேயே அவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததை இப்போதுவரை அவரது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
அவரது மறைவுக்கு தமிழ் சினிமாவில் இருந்து பலர் நேரடியாகவும் சோசியல் மீடியா மூலமாகவும் தங்களது அஞ்சலியை செலுத்தினர். இந்த நிலையில் நடிகர் விஜய் இன்று பெங்களூரில் உள்ள புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு சென்று அவரது சமாதிக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளன.