சுல்தான் படத்தை தொடர்ந்து அடுத்ததாக கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் சர்தார். இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இந்த படத்தை இயக்கி வருகிறார். கதாநாயகியாக ராசி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சிம்ரன் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு இந்தப்படத்தில் கார்த்தியின் இரு விதமான தோற்றங்கள் வெளியாகி இந்த படம் குறித்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்கனவே அதிகப்படுத்தி உள்ளன
இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே பாதி நடைபெற்றுள்ள நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக இடையில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் துவங்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து கொடைக்கானல் மற்றும் மைசூர் ஆகிய இடங்களில் உள்ள காட்டுப்பகுதியிலும் இதன் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. மேலும் இந்த படத்தின் சண்டைக்காட்சிகளை மிக பிரமாண்டமாக எடுக்க ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் திட்டமிட்டுள்ளாராம்.