V4UMEDIA
HomeNewsKollywoodஅஜித்தின் வலிமையை பார்த்து ரசித்த மலேசிய அமைச்சர்

அஜித்தின் வலிமையை பார்த்து ரசித்த மலேசிய அமைச்சர்

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு தமிழகம் தாண்டி வெளிநாடுகளிலும் ரசிகர்கள் அமோக ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

அந்தவகையில் மலேசியாவில் வெளியான இந்த திரைப்படத்தை மலேசிய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் அங்குள்ள அஜித் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்து ரசித்துள்ளார். அவரும் அடிப்படையில் ஒரு அஜித் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கான ஏற்பாடுகளை மலேசிய தல அஜித் ரசிகர்கள் கிளப் மற்றும் மற்றும் மாலிக் ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிகழ்வில் மலேசியாவின் புகழ்பெற்ற சிங்க நடனமும் அதைத்தொடர்ந்து பைக் வீரர்களின் சாகச அணிவகுப்பு உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

Most Popular

Recent Comments