அஜித் நடித்த வலிமை திரைப்படம் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது பொதுவாகவே விஜய், அஜித் படத்தில் நடிக்கும் பலரும் ரசிகர்களிடம் வெகு சீக்கிரம் மனதில் பதிந்து விடுவார்கள். அப்படித்தான் வலிமை படத்தில், தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்து முதன்முதலாக வில்லனாக நடித்திருக்கும் நடிகர் கார்த்திகேயா, தற்போது ரசிகர்களிடம் ரொம்பவே பிரபலமாகிவிட்டார்.
இந்தப்படத்தில் அஜீத்தின் தம்பியாக படம் முழுக்க வரும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராஜ் அய்யப்பா என்கிற நடிகரும் தற்போது ரசிகர்களின் கவனிப்புக்கு ஆளாகியுள்ளார். யார் இந்த ராஜ் அய்யப்பா என்றால் அவரை பற்றிய ஒரு சுவாரசியமான விஷயம் ஒன்றும் உள்ளது. இவரது தந்தை பானு பிரகாஷும் ஒரு நடிகர் தான்.
அதிலும் அஜித் முதன்முதலாக அறிமுகமான அமராவதி படத்தில் அவருக்கு நண்பராக நடித்த பெருமை இந்த பானு பிரகாஷுக்கு உண்டு. இப்போது அவரது மகன் அஜித்திற்கு தம்பியாக நடித்துள்ளார் என்பது சினிமாவில் எப்போதாவது நிகழும் ஆச்சரியங்களில் ஒன்று.