Home News Kollywood வலிமையை இன்னும் வலிமையாக்க படத்தின் நீளம் குறைப்பு

வலிமையை இன்னும் வலிமையாக்க படத்தின் நீளம் குறைப்பு

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் நேற்று வெளியானது. இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகள் குறிப்பாக பைக் சேசிங் காட்சிகள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தன. அதிலும் அஜித் வில்லன் கார்த்திகேயாவை பைக் சேஸிங் செய்து விரட்டிப்பிடிக்கும் அந்த 15 நிமிட காட்சிகளும், வில்லனை கோர்ட்டில் ஒப்படைப்பதற்காக காவல்துறையின் பஸ்ஸில் பயணிக்கும் அந்த 12 நிமிட சண்டை காட்சியும் ரொம்பவே நீளமாக இருந்தாலும் ரசிகர்களுக்கு கொஞ்சம் கூட அலுப்பு தட்டாமல் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு இருந்தன.

அதேசமயம் படத்தில் சென்டிமென்ட் காட்சிகள் சற்று நீளமாக இருப்பதாகவும் படத்திற்கு அவைதான் ஸ்பீடு பிரேக்கர்களாக இருப்பதாகவும் படம் பார்த்துவிட்டு வந்த ரசிகர்கள் பலரும் சோஷியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வருகின்றனர் இவற்றையெல்லாம் கவனித்த படத்தயாரிப்பு நிறுவனம் தற்போது படத்திலிருந்து 18 நிமிட காட்சிகளை குறைத்து நாளை முதல் புதிய வெர்சனை தியேட்டர்களில் திரையிட இருக்கிறார்கள் என்கிற தகவல் வெளியாகி உள்ளது..