திரையுலகில் தனக்கென தனியாக ஒரு பாதையை வகுத்து, குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் ஃபேவரைட் ஹீரோவாக வலம் வரும் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக மாறி தயாரித்த முதல் திரைப்படம் கனா. அருண்ராஜா காமராஜ் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக மாறினார்.
ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் நடிக்க, சிவகார்த்திகேயன் கிரிக்கெட் பயிற்சியாளராக சிறப்பு தோற்றத்தில் நடித்த இந்த படம் கடும் போட்டிக்கு இடையே வெளியானாலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் பெண் கிரிக்கெட் வீராங்கனையாக மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்
இந்தநிலையில் இந்தப்படத்திற்கு மகுடம் சூட்டும் விதமாக ஒரு புதிய செய்தி வெளியாகியுள்ளது.. ஆம்.. வரும் மார்ச் 18ஆம் தேதி இந்தப்படம் சீன மொழியில் வெளியாக இருக்கிறது. ஆமீர்கான், ரஜினிகாந்த், பிரபாஸ் ஆகிய மிகச்சில ஹீரோக்களின் படங்களே சீனாவில் வெளியாகியுள்ள நிலையில் சிவகார்த்திகேயன் படத்திற்கும் இந்த பெருமை கிடைத்துள்ளது ஆச்சர்யமான் விஷயம் தான்.