Home News Kollywood தெலுங்கில் ராணாவின் தந்தையாக மாறிய சமுத்திரக்கனி

தெலுங்கில் ராணாவின் தந்தையாக மாறிய சமுத்திரக்கனி

தென்னிந்திய அளவில் மோஸ்ட் வான்டட் நடிகராக மாறிவிட்டார் இயக்குனர் சமுத்திரக்கனி. பாலிவுட்டே கூட ஆவலுடன் எதிர்பார்க்கும் ஆர்ஆர்ஆர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சமுத்திரக்கனி. இந்தநிலையில் தெலுங்கில் இன்று வெளியாகியுள்ள பீம்லா நாயக் என்கிற படத்தில் நடித்துள்ளார் சமுத்திரக்கனி.

பவன் கல்யாண், ராணா இருவரும் ஹீரோவாக நடித்துள்ள இந்தப்படத்தில் ராணாவின் தந்தையாக மிகப்பெரிய தாதாவாக நடித்துள்ளார் சமுத்திரக்கனி. இந்தப்படத்தின் ஏற்கனவே மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற அய்யப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக்காகும். மலையாளத்தில் இயக்குனர் ரஞ்சித் நடித்திருந்த கதாபாத்திரத்தில் தான் சமுத்திரக்கனி நடித்துள்ளார்.