பாண்டிராஜ் இயக்கத்தில் பசங்க 2 படத்தை தொடர்ந்து மீண்டும் சூர்யா நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். சத்யராஜ், ராஜ்கிரண், சூரி, வினய், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, ஜெயப்பிரகாஷ், எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு இமான் இசை அமைத்துள்ளார்.
வரும் மார்ச் 10ஆம் தேதி இந்தப் படம் உலகெங்கிலும் ரிலீசாக இருக்கிறது. இந்த நிலையில் படம் ரிலீஸாகும் தினத்தன்றே சில முக்கியமான தியேட்டர்களுக்கு நடிகர் சூர்யா விசிட் அடிக்கிறார்.. ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்க்கவும் படம் குறித்த அவர்களது ரியாக்சனையும் கருத்துக்களையும் தெரிந்துகொள்வதற்காக தியேட்டர்களில் வலம் வர இருக்கிறார் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.