கிரிக்கெட் உலகில் சச்சினுக்கு அடுத்தபடியாக அனைத்து தரப்பினரையும் கவர்ந்த வீரர் என்றால் அது எம்எஸ் தோனி தான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக அவர் பொறுப்பேற்ற பின்னர் அவர் ஒரு தமிழர் ஆகவே அதிலும் சென்னைக்காரர் ஆகவே மக்கள் மனதில் பதிந்து விட்டார். இந்தநிலையில் ரமேஷ் தமிழ்மணி என்பவர் எழுதியுள்ள ‘அதர்வா ; தி ஆரிஜின்’ என்கிற கிராபிக் நாவலில் சூப்பர் ஹீரோவாக தோன்றியுள்ளார் எம்எஸ் தோனி.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்த நாவலின் மோஷன் போஸ்டரை தோனி தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டிருந்தார். சரித்திர நாயகர்கள் தோற்றத்தில் காணப்பட்ட தோனியின் கெட்டப்பே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் நாவலின் கவர் பக்கத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். அத்துடன் இந்த நாவலின் முதல் பிரதியையும் அவர் பெற்றுக்கொண்டார்.
இதுகுறித்து நாவலாசிரியர் ரமேஷ் தமிழ்மணி கூறும்போது, “இந்த புத்தகத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டது எங்களுக்கு மிகுந்த பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. எங்களது உழைப்பிற்கான அங்கீகாரமாக இதை நாங்கள் கருதுகிறோம்” என்று கூறுகிறார் கூறியுள்ளார்.