V4UMEDIA
HomeNewsKollywoodவிஜய்யின் அரபிக்குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட அஜித் ரசிகர்கள்

விஜய்யின் அரபிக்குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட அஜித் ரசிகர்கள்

பொதுவாகவே அஜித், விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ஒருவருக்கொருவர் எதிர்மறை கருத்துக்களை கூறி வார்த்தைகள் தாக்குதல் நடத்துவது தான் வழக்கம்.. ரசிகர்களில் குறிப்பிட்ட சிலரே இப்படி செய்கின்றனர் என்றாலும் ஏதோ அஜித், விஜய் இருவருக்குமே நீண்டநாள் நேரடி பகை இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி விடுகின்றனர். ஆனால் விஜய் அஜித் இருவருக்குமான நட்பு ஊர்றிந்த விஷயம் தான்.

இந்த நிலையில் இன்று அஜித்தின் வலிமை படம் வெளியாகியுள்ள சூழலில் அஜித் ரசிகர்கள் அதை கொண்டாடி வருகின்றனர். அப்படி தஞ்சாவூரில் உள்ள ஒரு தியேட்டரில் வலிமை படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காண கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அந்த சமயத்தில் அஜித் பட பாடல்களாக ஒலிக்கப்பட்டு வந்தது. அப்போது திடீரென விஜய் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் பீஸ்ட் படத்தில் இருந்து சமீபத்தில் ஹிட்டான அரபிக்குத்து பாடலும் ஒலித்தது. ஆனால் அதுபற்றி எல்லாம் அஜித் ரசிகர்கள் அலட்டிக் கொள்ளாமல் அந்த பாடலுக்கும் உற்சாகமாக ஆட்டம் போட்டு தங்களது சமநிலையை அழகாக வெளிப்படுத்தினார்கள்.

விஜய் பாட்டுக்கு ரசிகர்கள் ஆட்டம் போட்ட இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இருதரப்பு ரசிகர்கள் பெரும்பாலும் இந்த வீடியோவுக்கு பாசிட்டிவான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Most Popular

Recent Comments