பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மற்றும் முன்னாள் நடிகை லிசி தம்பதியின் மகள்தான் கல்யாணி பிரியதர்ஷன்.. தற்போது மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் மாறி மாறி பிஸியாக நடித்து வருகிறார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதேபோல மலையாளத்தில் அவர் நடித்த ஹிருதயம் மற்றும் ப்ரோ டாடி படங்களும் கூட மிகப் பெரிய வரவேற்பை பெற்றன.
இதனால் நாளுக்கு நாள் கல்யாணியின் ரசிகர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. அந்த வகையில் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கல்யாணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.
குறிப்பாக இன்றைய தினம் சிறப்பான தேதி, அதாவது 22.௦2.2022 என எழுதி எந்தப்பக்கம் இருந்து பார்த்தாலும் ஒரே மாதிரி அமைந்திருக்கும் இந்த தினத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு 2.2 மில்லியன் பாலோயர்கள் என்கிற மிகப்பெரிய இலக்கையும் கல்யாணி பிரியதர்ஷன் அடைந்துள்ளார். இந்த தகவலை அவரே சந்தோஷத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார்