பொதுவாகவே நடிகர் விஜய் எந்த ஒரு செயல் செய்தாலும் அதை விமர்சன கண்ணோட்டத்துடன் பார்க்கும் போக்கு இப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.. தேர்தல் தோறும் தவறாமல் வந்து வாக்களித்து செல்வதை ஒரு கடமையாகவே வைத்திருக்கிறார் நடிகர் விஜய்..
கடந்தமுறை சட்டமன்ற தேர்தலின் போது தனது வீட்டிலிருந்து சைக்கிளில் எளிமையாக வந்து வாக்களித்துச் சென்றார். அதற்கும் விமர்சனம் கிளம்பியது. தற்போது சிவப்பு கலர் கார் ஒன்றில் வாக்களிக்க வந்த விஜய் வாக்களிக்கும் சமயத்தில் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதற்காக வரிசையில் நின்றிருந்த வாக்காளர்களிடம் கூட பெருந்தன்மையாக மன்னிப்பு கேட்டதையும் பார்க்க முடிந்தது.
ஆனால் அவர்மீது பிரச்சினையை கிளப்புவோர் புதுப்புது வழிகளை கண்டு பிடிப்பது வாடிக்கை தானே. அந்த வகையில் விஜய் வந்து சென்ற காருக்கு இன்சூரன்ஸ் தேதி காலாவதி ஆகிவிட்டது என்று புதிய விவகாரம் ஒன்றை கிளப்பினார்கள். அப்படி கிளப்பியவர்களுக்கு அந்த விஷயம் பற்றி இரண்டு நாட்களாவது பேசப்பட்டு அதன்மூலம் விஜய் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது தான் நோக்கம்,
ஆனால் இதுகுறித்து தற்போது விஜய்யின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அகமது வெளியிட்டுள்ள தகவலின் மூலம், விஜய்யின் கார் இன்சூரன்ஸ் முடிவடைவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் கால அவகாசம் இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது இதற்கான இன்சூரன்ஸ் சான்றிதழையும் அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு விஜய் மீது அவதூறு பரப்புவோருக்கு பதிலடி கொடுத்து அவர்களின் வாயை அடைத்துள்ளார்