போர்க்கள பின்னணியில் படங்கள் வருவது தமிழ் சினிமாவில் ரொம்பவே அரிது. அந்த குறையை போகும் விதமாக உருவாகியுள்ள படம் தான் சல்லியர்கள்.. சமகாலத்தில் நம் கண் முன்னே தமிழ் நிலத்தில் நடந்த போர் ஒன்றை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் தான் இந்த ‘சல்லியர்கள்’. படத்தை பார்க்கும்போதே இது எங்கு நடந்த போர் என்பதை உணர்ந்து கொள்ள முடியுமாம்.
மேதகு என்கிற படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டு. தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். நடிகர் கருணாஸ் இந்தப்படத்தை தயாரித்துள்ளதுடன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
தற்போது படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.. இந்தநிலையில் இந்தப்படத்தின் டீஸரை கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்டார்.
போர்க்களத்தில் காயம்பட்ட தமிழ் வீரர்கள் மட்டுமல்லாது எதிரி வீரர்களையும் காப்பாற்றி, போரில் கூட தமிழர்கள் எவ்வாறு அறம் சார்ந்து செயல்பட்டுள்ளனர் என்பதை மையப்படுத்தி, குறிப்பாக போர் மருத்துவ பின்னணியில் இந்தப்படம் உருவாகியுள்ளதாம்.
சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லன் களவாணி புகழ் திருமுருகனும் மற்றும் டாக்டர் செம்பியனாக மகேந்திரனும் நடித்துள்ளனர். மற்றபடி பெரும்பாலும் புதுமுகங்களே இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.