தெலுங்கில் சில வருடங்களுக்கு முன்பு நடிகர் மகேஷ்பாபுவின் ஆஸ்தான இயக்குனராக, அவருக்கு ஹிட் படங்கள் கொடுத்தவர் இயக்குனர் குணசேகர். இவர் தற்போது சாகுந்தலம் என்கிற வரலாற்று படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் சமந்தா. கதையின் நாயகனாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடிக்க, முக்கிய வேடங்களில் அதிதி பாலன் கௌதமி ஆகியோர் நடிக்கின்றனர்.
தெலுங்கில் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் இந்த படம் உருவாகி வருகிறது இன்னும் சொல்லப்போனால் இதை சமந்தாவின் முதல் பான் இந்தியா படம் என்றுகூட சொல்லலாம்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே சமந்தா பிரமிப்பை ஏற்படுத்துகிறார்.
இந்த படத்திற்காக நிறைய ஆய்வுகள் செய்து கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர் குணசேகர். நிச்சயமாக சமந்தாவுக்கு பெயர் சொல்லும் படமாக இது அமையும் என்றே சொல்லலாம்.