V4UMEDIA
HomeNewsKollywoodதயாரிப்பாளர் அன்புச்செழியன் மகள் திருமணம் ரஜினி கமல் கலந்து கொள்ள கோலாகலமாக நடந்தது

தயாரிப்பாளர் அன்புச்செழியன் மகள் திருமணம் ரஜினி கமல் கலந்து கொள்ள கோலாகலமாக நடந்தது

தமிழ் திரையுலக தயாரிப்பாளர்களுக்கு பலருக்கும் படங்களை தயாரிப்பதில், பின்னணியிலிருந்து ஒரு தூணாக அவர்களை தாங்கிப்பிடித்து உதவி வருபவர் தயாரிப்பாளரும் பைனான்ஸியருமான அன்புச்செழியன். இவரது மகள் சுஷ்மிதா மற்றும் சன் ஐஏஎஸ் அகடமி இயக்குனர் சரணின் திருமணம் நேற்று சென்னையில் நடைபெற்றது.

கடந்த இரண்டு வாரங்களாகவே சினிமா பிரபலங்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என அனைவருக்கும் நேரில் சென்று திருமண பத்திரிக்கை வினியோகம் செய்து வந்தார் அன்புச்செழியன்.

இந்தநிலையில் நேற்று நடைபெற்ற இந்த திருமணத்தில் திரையுலக முன்னணி நட்சத்திரங்களான நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் மற்றும் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கோவித் பாதிப்பு ஏற்பட்ட இந்த இரண்டு வருட காலத்தில் நீண்ட நாளைக்கு பிறகு திரையுலகை சேர்ந்த ஒருவர் வீட்டு விசேஷம் இப்போதுதான் இவ்வளவு பிரமாண்டமாக நடைபெற்றள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Popular

Recent Comments