போனிகபூர், H. வினோத், அஜித் என்கிற வலிமையான மூவர் கூட்டணி நேர்கொண்டபார்வை படத்திற்கு பிறகு மீண்டும் வலிமை படத்தில் இணைந்துள்ளது. வரும் பிப்ரவரி 24ஆம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறார் தயாரிப்பாளர் போனி கபூர். தெலுங்கில் பிரபாஸ் அல்லு அர்ஜுன் உள்ளிட்ட முன்னணி இளம் ஹீரோக்கள் தங்களது படங்களை பான் இந்தியா ரிலீசாக வெளியிடவே விருப்பம் காட்டி, அதன்படியே செய்தும் வருகின்றனர்.
ஆனால் தமிழில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் அஜித்தின் படங்கள் இதுவரை பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆனது இல்லை. முதன்முதலாக வலிமை இந்திய அளவில் ரிலீசாகும் அஜித் படம் என்கிற பெருமையை பெற்றுள்ளது. அஜித் படங்களுக்கான பான் இந்தியா என்கிற விசாலமான வாசலை வலிமை திறந்துவிட்டுள்ளது என பெருமிதம் பொங்க கூறியுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர்.