இசைஞானி இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன், தானும் சில படங்களுக்கு இசையமைத்துள்ளதோடு பல பாடல்களையும் எழுதியுள்ளார்.. இதுதவிர கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல ஹிட் படங்களையும் இயக்கியுள்ளார்… இருவரும் முன்னணியில் இருந்த காலத்தில், ஒன்றாக பணியாற்றி வந்தனர். இடையில் இருவருக்கும் சற்று கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கங்கை அமரன் தனது அண்ணனிடம் இருந்து விலகியிருந்தார். இந்த நிலையில் இசைஞானி இளையராஜாவுடன், மீண்டும் இணைந்து விட்டதாக, மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் கங்கை அமரன்.
இதுகுறித்து நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்றை ஏற்கனவே வெளியிட்டுள்ளார் கங்கை அமரன். இந்த நிலையில் தங்கர்பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடிக்கும் தக்கு முக்கு திக்கு தாளம் என்கிற படத்திற்கு வாழ்த்து சொன்ன கங்கை அமரன் தனது அண்ணன் சார்பாகவும் சேர்த்து வாழ்த்து கூறியதோ,டு நான் அண்ணனுடன் சேர்ந்து விட்டேன் என்று சந்தோஷத்துடன் கூறியுள்ளார்..