இந்த கொரோனா காலகட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களாக திரைப்படங்கள் வெளிவருவதே, அரிதாகி இருந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் நடித்த படங்கள் மட்டும் அதிக அளவில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தின. இது ஒரு பக்கம் இருக்க, அதிக அளவு படங்களிலும் தற்போது நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
அந்தவகையில் மலையாளத்தில் தற்போது அவர் நடித்துள்ள படம் வாஷி.. மாரி-2 படத்தில் வில்லனாக நடித்த டொவினோ தாமஸ் இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை விஷ்ணு ராகவ் என்பவர் இயக்கியுள்ளார். இந்த விஷ்ணு ராகவ் வேறு யாருமல்ல.. கீர்த்தி சுரேஷின் பள்ளிக்கால தோழன்,
உதவி இயக்குனராக இருந்த அவரை இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.. ஆம்.. இந்த படத்தை கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் குமார் தான் தயாரித்துள்ளார்.
இந்தப்படத்தில் டொவினோ தாமஸ், கீர்த்தி சுரேஷ் இருவருமே வழக்கறிஞர்கள் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்கள் இருவரும் வழக்கறிஞர்கள் கெட்டப்பில் இருக்கும் போஸ்டர் ஒன்றும் தற்போது வெளியிடப்பட்டு இதை உறுதி செய்துள்ளது.