கிட்டத்தட்ட ஆயிரம் படங்களை தாண்டி இசையமைத்துக் கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜா திரைப்படங்கள் அல்லாது தனியாக இசை அமைத்த ஆல்பம் சாங் ஹவ் டு நேம் இட். வார்த்தைகளே இல்லாத வாத்தியக் கருவிகளின் துணை கொண்டு இந்த ஆல்பத்தை உருவாக்கிய இளையராஜா தியாகராய சுவாமிகளுக்கு அற்பணிப்புக்காக இந்த ஆல்பத்தை உருவாக்கினார். இது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் இந்த பாடலின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இருப்பதாக வீடியோ பதிவு ஒன்றில் வெளியிட்டுள்ளார் இளையராஜா இதுகுறித்து அவர் கூறும்போது ஹாலிவுட்டில் சூப்பர்மேன் படங்களுக்கு 1,2,3 என அடுத்தடுத்த பாகங்களை எடுக்கிறார்கள் ஏன் அது போல பாடல்களுக்கு இரண்டாம் பாகம் மூன்றாம் பாகம் என எடுக்கக்கூடாது என தோன்றியது. அந்த வகையில் ஹவ் டு நேம் இட் இசை ஆல்பத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இருக்கிறேன் என அதில் கூறியுள்ளார் இசைஞானி இளையராஜா.