விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் எஃப்ஐஆர்.. இந்த படத்தை அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கியிருந்தார். கதாநாயகிகளாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் என மூன்று பேர் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி கிட்டதட்ட பத்து நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த படத்தின் வெற்றிச்சந்திப்பில் இந்த படத்திற்காக தான் பட்ட கஷ்டங்களை நெகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார் விஷ்ணு விஷால்.
“கொரோனா காலகட்டத்தில் கூட சரியான நேரத்திற்கு செக் எழுதிக்கொடுத்து பணம் பட்டுவாடா செய்ததாக இங்கே குறிப்பிட்டார்கள். ஆனால் அதன் பின்னால் நான் பட்ட கஷ்டங்கள் ஏராளம்.. அந்த சமயத்தில் வெளியே கடன் வாங்க வேண்டாம் என்று கூறிய என் தந்தை, தன்னுடைய பென்சன் பணத்தை கொடுத்து உதவினார்.
இந்த படத்தின் கதையை, ஆனால் என்னிடம் மனு ஆனந்த் என்னிடம் சொன்னபோது, ஃபேமிலிமேன்-2, மாநாடு ஆகிய படங்கள் வந்திருக்கவில்லை. அந்த படங்கள் வெளிவந்தபோது கூட, இந்த படத்தை துணிந்து தயாரிப்போம் என்று, களத்தில் இறங்கினோம்.. இன்று விஷ்ணு விஷால் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார் என்று ஊடகங்கள் பாராட்டும்போது சந்தோஷமாக இருக்கிறது” என்று கூறினார்.