தனுஷின் திரையுலக பயணத்தில் மிக பலமான அஸ்திவாரத்தை அமைத்து கொடுத்தவர் அவரது அண்ணன் இயக்குனர் செல்வராகவன்.. கடைசியாக இவர்கள் கூட்டணியில் 2011ல் ‘மயக்கம் என்ன’ படம் வெளியானது. அந்தவகையில் ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு தனுஷ் மீண்டும் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்கிற படத்தில் நடித்து வருகிறார்..
இந்தப்படத்தில் இவர் இரு வேடங்களில் நடித்து வருகிறார் என்றும் குறிப்பாக இந்தப்படம் பக்கா ஆக்சன் படமாக உருவாகிறது என்றும் சொல்லப்பட்டு வருகிறது. கதாநாயகிகளில் ஒருவராக இந்துஜா நடிக்கிறார்.
இந்தப்படத்தில் வில்வித்தை சம்பந்தமான காட்சிகள் இடம்பெறுகின்றனவாம். இதற்காக நடிகர் தனுஷ் கராத்தே வீரர் சிகான் ஹூசைனியிடம் வில்வித்தை பயிற்சி எடுத்துக்கொண்டுள்ளாராம்.