V4UMEDIA
HomeNewsKollywoodநானி-கீர்த்தி சுரேஷின் தசரா துவங்கியது

நானி-கீர்த்தி சுரேஷின் தசரா துவங்கியது

தெலுங்கில் ஷ்யாம் சிங்கா ராய் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நானி நடித்துள்ள அண்டே சுந்தராங்கி படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்தநிலையில் நானி தசரா என்கிற படத்தில் நடிக்கிறார்.. இந்தப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். நேனு லோக்கல் படத்தை தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் கீர்த்தி சுரேஷ், நானி இருவரும் இந்தப்படத்தில் இணைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா என்பவர் இயக்குகிறார்.. இவர் புஷ்பா பட இயக்குனர் சுகுமாரின் சீடர்.. அதனால் இன்று நடைபெற்ற இந்தப்படத்தின் துவக்க விழா பூஜையில் சுகுமாரும் கலந்துகொண்டு படப்பிடிப்பை துவங்கி வைத்தார். மார்ச் முதல் முழுவீச்சில் படப்பிடிப்பு துவங்கும் என தெரிகிறது. சந்தோஷ் நாராயணன் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்

Most Popular

Recent Comments