V4UMEDIA
HomeNewsKollywoodஇன்னொரு ‘96’ போன்ற உணர்வை ரசிகர்களுக்கு கடத்துமா ‘ஹே சினாமிகா’ ?

இன்னொரு ‘96’ போன்ற உணர்வை ரசிகர்களுக்கு கடத்துமா ‘ஹே சினாமிகா’ ?

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருந்தாலும், தனது தந்தை மம்முட்டியை போலவே தமிழிலும் ஒரு நிலையான இடத்தை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் நடிகர் துல்கர் சல்மான். அதற்கேற்றபடி கடந்த 2௦2௦ல் அவர் நடிப்பில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதை தொடர்ந்து தற்போது தமிழில் ‘ஹே ஷினாமிகா’ என்கிற படத்தில் நடித்துள்ளார் துல்கர் சல்மான்,. இந்தப்படத்தை பிரபல நடன இயக்குனர் பிருந்தா இயக்கியுள்ளார். காஜல் அகர்வால், அதிதி ராவ் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ‘96’ புகழ் கோவிந்த் வசந்தா இந்தப்படத்துக்கு இசையமைத்துள்ளார்

வரும் மார்ச்-3ஆம் தேதி இந்தப்படம் தியேட்டர்களில் வெளியாகிறது. அதன் முன்னோட்டமாக இந்தப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.. உற்சாகமிக்க தனித்துவ இளைஞரான யாழன் (துல்கர்), அவரை காதலிக்கும் வானிலை விஞ்ஞானி மௌனா (அதிதி)… ஓரிரு வருடங்களுக்குப் பிறகு அவர்களது உறவில் என்ன நடக்கிறது, மலர்விழி (காஜல்) வருகைக்குப் பின்னர் எப்படி எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது என்பதுதான் கதையின் மையக்கரு என்பதை இந்த ட்ரெய்லர் சொல்லாமல் சொல்கிறது.

அதுமட்டுமல்ல இயக்குனர் பிருந்தாவும் “இது ஒரு ஃபீல் குட் திரைப்படம். இளைஞர்கள் மிகவும் ரசிப்பார்கள். அதே சமயம், அனைத்து வயதினரும் இப்படத்தை பார்த்து மகிழலாம். கொண்டாட்டம், குதூகலம் என உணர்ச்சிகளின் உற்சாகக் குவியலாக இந்தப்படம் இருக்கும்”  என்று கூறியுள்ளதும், கோவிந்த் வசந்தா இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளதையும் பார்க்கும்போது, ‘96’ படம் பார்த்தது போன்ற உணர்வை ரசிகர்களுக்கு ‘ஹே சினாமிகா கடத்துமா என்கிற ஆர்வம் எழுந்துள்ளது.’

Most Popular

Recent Comments