பிரபல சீனியர் தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகன்களில் ஒருவரான உதயா நடிகராக மாறிவிட, அவரது சகோதரர் விஜய் இயக்குனர் ரூட்டில் நுழைந்து வெற்றிகரமான இயக்குனராக வலம் வருகிறார். இந்தநிலையில் இவர்களது சகோதரி மகன் ஹமரேஷ், ரங்கோலி என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இதற்கான அறிமுக விழா பூஜை சமீபத்தில் நடைபெற்றது.
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக உள்ள இந்தப்படத்தை இயக்குனர் வஸந்த்திதம உதவி இயக்குனராக பணிபுரிந்த வாலி மோகன்தாஸ் என்பவர் இயக்குகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் சென்னை, ஹைதராபாத் மற்றும் கேரளாவில் நடைபெற உள்ள நிலையில் கதாநாயகி உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது