V4UMEDIA
HomeNewsKollywoodஎப்ஐஆர் படத்தை எடுத்ததற்கு காரணம் இதுதான் ; மனம் திறந்த விஷ்ணு விஷால்

எப்ஐஆர் படத்தை எடுத்ததற்கு காரணம் இதுதான் ; மனம் திறந்த விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்தததாக வெளிவர தயாராக இருக்கும் படம் எப்ஐஆர். மனு ஆனந்த் இயக்கியுள்ள இந்தப்படத்தில் மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடிக்க, ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். விஷ்ணு விஷாலே இந்தப்படத்தை தயாரித்தும் உள்ளார்.

இந்தப்படம் வரும் பிப்-11ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ள நிலையில் இந்தப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய விஷ்ணு விஷால், இந்தப்படத்தில் நடிக்க ஒப்புகொண்டது என்..? மேலும் இந்தப்படத்தை தானே தயாரிக்க முன்வந்தது ஏன் என்பதற்கான காரணங்களை அவரே கூறினார்.

“இந்தக் கதையை மனு ஆனந்த் சொன்னபோதே எனக்கு பிடித்திருந்தது. எனக்கு சையத் முகமது என ஒரு நண்பர் இருந்தார், அவருக்கு நடந்த சில விஷயங்களை சொல்லும்போது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் வளர்ந்த விதம் வேறு என்றாலும், ஆனால் இந்தக்கதை கேட்டபோது அவர் கூறியவற்றை உணர்ந்தேன். இது உண்மையில் நடக்கிறதே, இதை சொல்ல வேண்டும் என தோன்றியது.

ஒரு கட்டத்தில் இந்த படம் தயாரிப்பாளர் தயாரிக்க முடியாத சூழ்நிலையில், என்னிடம் வந்து நீங்கள் காத்திருக்க வேண்டும் என உண்மையை சொன்னார் மனு, அவரது நேர்மை பிடித்திருந்தது அதனால் தான் இந்தப்படம் செய்தேன். அவருக்காக தான் இந்தப்படம் செய்தேன்.

நிறைய பேர் படம் பார்த்துவிட்டார்கள், தனுஷ் படம் பார்த்து விட்டார், ராட்சசன் படத்தை தாண்டி இந்தப்படத்தில் ஒரு நடிகராக மிரட்டி விட்டீர்கள் என்று பாராட்டினார், ரொம்ப சந்தோஷமாக இருந்தது” என்று கூறினார் விஷ்ணு விஷால்.

Most Popular

Recent Comments