சுசீந்திரன் ஜெய் கூட்டணியில் தற்போது உருவாகியுள்ள படம் சிவசிவா. சுசீந்திரன் இயக்கிய கென்னடி கிளப் படத்தின் நாயகிகளில் ஒருவராக நடித்த மீனாட்சி கோவிந்தராஜன் இதில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் மற்றும் சுசீந்திரனின் நண்பர்கள் சிலர் படம் நன்றாக வந்திருப்பதாக பாராட்டியுள்ளனர். அதேசமயம் இந்த படத்தின் டைட்டிலை மாற்றினால் நன்றாக இருக்கும் என்கிற கருத்தை படம் பார்த்த அனைவருமே கூறியுள்ளனர். குறிப்பாக படத்திற்கு இன்னும் மாஸான டைட்டிலாக இருந்தால் கெத்தாக இருக்கும் என்று ஆலோசனை கூறியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் மற்றும் தனது குழுவினருடன் கலந்தாலோசித்த சுசீந்திரன் தற்போது படத்திற்கு வீரபாண்டியபுரம் என பெயர் சூட்டியுள்ளார்.
ஏற்கனவே விஷால் நடிப்பில் அவர் இயக்கிய பாண்டிய நாடு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஹீரோ விஷாலுக்கும் திருப்புமுனையாக அமைந்தது. அந்த சென்டிமென்ட்படி இந்த வீரபாண்டியபுரமும் சுசீந்திரன், ஜெய் இருவருக்குமே திருப்பம் தரும் என எதிர்பார்க்கலாம்.