கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித்-அருண்விஜய் இணைந்து நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் வெளியாகி ஏழு வருடங்கள் நிறைவடைந்து விட்டன..
இதையடுத்து இந்தப்படத்தின் மூலம் தனக்கு திருப்புமுனை ஏற்படுத்திக்கொடுத்த தனது வழிகாட்டியான இயக்குனர் கௌதம் மேனனுடன் இந்த நிகழ்வை கொண்டாடி மகிழ்ந்துள்ளார் நடிகர் அருண் விஜய்.
ஒருவர் ஸ்ட்ரெய்ட்டாக வில்லனாக நடிக்கிறாரா, இல்லை சூழ்நிலை காரணமாக ஹீரோவாக இருந்து வில்லனாக நடிக்கிறாரா என்பதெல்லாம் தேவையில்லை. கௌதம் மேனன் படத்தில் நடித்தால் வில்லனும் கூட இன்னொரு ஹீரோ தான் என்பதுதான் இதுவரை நிரூபிக்கப்பட்ட விதி.
அந்தவகையில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என சொல்வதுபோல நீண்ட காலத்திற்கு பிறகு அருண்விஜய்க்கு ரசிகர்களின் மத்தியிலும், திரையுலகிலும் மிகப்பெரிய அங்கீகாரத்தை வாங்கித்தந்தது ‘என்னை அறிந்தால்’ படத்தில் அவர் நடித்த விக்டர் என்கிற அந்த வில்லன் கதாபாத்திரம் தான்.
அதன்பிறகு இப்போது வரை அருண்விஜய்யின் திரையுலக பயணத்தில் ஏறுமுகம் தான்