பல இயக்குனர்கள் ஒருகட்டத்தில் நடிகராக மாறுவதை போலவே இயக்குனர் செல்வராகவனும் தனது புதிய இன்னிங்ஸை தற்போது ஒரு நடிகராக துவங்கியுள்ளார்.. அந்தவகையில் அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்கத்தில் சாணிக்காயிதம் படத்தில் கதையின் நாயகனாக செல்வராகவன் நடித்துள்ளார்.

அதேபோல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவரும் நடிகை கீர்த்தி சுரேஷ் இந்தப்படத்தில் கதையின் முக்கியத்துவம் கருதி கதாநாயகியாக நடித்துள்ளார்.

சாணிக்காயிதம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தநிலையில் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.

தற்போது நிலவும் சூழலை மனதில் கொண்டு இந்தப்படம் ஒடிடி தளத்தில் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. பிரபல முன்னணி ஒடிடி நிறுவனம் ஒன்று இந்தப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றி உள்ளதாகவும் ஏப்ரலில் படத்தை வெளியிட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிகிறது.