பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி மிகப்பெரிய வெற்றியை ருசித்தவர் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி. அதனாலேயே தற்போது ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து, அவர் இயக்கிவரும் ஆர்ஆர்ஆர்’ படத்திற்கு தெலுங்கு தவிர மற்ற மொழிகளிலும் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
குறிப்பாக அஜய் தேவ்கன், ஆலியா பட் என பாலிவுட் நட்சத்திரங்களும் இதில் நடித்திருப்பதால் வட மாநிலங்களிலும் இந்தப்படத்தை காண ஆவலாக காத்திருக்கிறார்கள்..
இந்தப்படம் கடந்த ஜன-7ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் தான் ஒமிக்ரான் பரவல் காரணமாக தியேட்டர்களில் 5௦ சதவீத இருக்கைக்கே அனுமதி என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன .மேலும் கொரோனா மூன்றாவது அலையும் வேகம் எடுக்க ஆரம்பித்துள்ளது. இதனால் பொங்கல் ரேஸில் இருந்து ஆர்ஆர்ஆர் பின்வாங்கியது.
இந்தநிலையில் புதிய ரிலீஸ் தேதியை ஆர்ஆர்ஆர் பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் இந்தப்படத்தின் ரிலீஸுக்காக இரண்டு தேதிகளை குறித்துள்ளனர்.
அதாவது இப்போதிருக்கும் நிலைமை மார்ச் மாதத்திற்குள் ஓரளவு கட்டுக்குள் வந்தால் மார்ச்-18ல் படத்தை ரிலீஸ் பண்ணுவது எனவும், ஒருவேளை நிலைமை அப்போதும் சரியாகவில்லை என்றால் ஏப்-28ஆம் தேதி ரிலீஸ் பண்ணலாம் என்றும் முடிவெடுத்து அறிவித்துள்ளனர்.