இரண்டு படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய சுந்தர்.சி

V4UMEDIA

இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் காட்டி தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து, வெற்றிகரமாக வலம் வருபவர் இயக்குனர் சுந்தர்.சி. இன்று 54வது வயதில் அடி எடுத்து வைக்கும் சுந்தர்.சிக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது சுந்தர்.சி ஒன் 2 ஒன் மற்றும் தலைநகரம்-2 ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதில் திருஞானம் டைரக்ஷனில் தற்போது நடைபெற்று வரும் ஒன் 2 ஒன் படப்பிடிப்பில் சுந்தர்.சி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

படத்தின் கதாநாயகி ராகினி திவேதி, பேபி மானஸ்வி உள்ளிடா படக்குழுவினர் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்

பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது பிறந்தநாளை சுந்தர்.சி படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடுகிறார் என்பது ஆச்சரியமான விஷயம்

அதுமட்டுமல்ல அதற்கு முன்னதாக தலைநகரம்-2 இயக்குனர் வி.இசட்.துரை தனது படக்குழுவினருடன், சுந்தர்.சி அலுவலகத்திற்கு நேரில் சென்று சந்தித்து, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்துள்ளனர். இந்த சந்திப்பின்போது நடிகை குஷ்பு மற்றும் ஹிப்ஹாப் ஆதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

V4UMEDIA