ஆதலால் காதல் செய்வீர், மாவீரன் கிட்டு, கென்னடி கிளப் உள்ளிட்ட சுசீந்திரன் இயக்கிய பல படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் தாய் சரவணன். இதுதவிர தரமான படைப்பு என மக்களால் போற்றப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை போன்ற படங்களையும் ரிலீஸ் செய்து பாராட்டுகளைப் பெற்றவர்.
வசதி வந்ததுமே தனது பெற்றோரை, குறிப்பாக தங்களது தாயாரை தவிக்க விட்டுவிடும் பல சுயநல மனிதர்கள் மத்தியில், தனது தாய் ஜெயலட்சுமிக்கு தன்னுடைய சொந்த ஊரான ஒட்டன்சத்திரத்தில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பிரதான சாலையில் அமைந்துள்ள தனது தோட்டத்தில் பிரமாண்டமான மணிமண்டபம் கட்டியுள்ளார் தாய் சரவணன்.
இரவு நேரத்தில் விளக்கொளியில் ஜொலிக்கும் மன்மண்டபத்தை அந்தப்பகுதி மக்கள் மட்டுமலாது சாலையில் செல்வோரும் பிரமிப்புடன் பார்த்து செல்கின்றனர்.
கோவில் கட்டும் அளவிற்கு தன் தாயின் மீது பாசம் வைத்திருக்கும் தாய் சரவணனின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.