கொரோனா தொற்றின் இரண்டு அலைகள் முடிவடைந்து தற்போது மூன்றாவது அலை பரவ துவங்கியுள்ளது. இந்த மூன்றாம் அலையில் பல திரையுலக பிரபலங்கள், குறிப்பாக இளம் நட்சத்திரங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடிகர் விஷ்ணு விஷால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் தான் அதிலிருந்து மீண்டு வந்தார்
அதேபோல தற்போது பிஸியாக பல படங்களில் நடித்து வரும் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். தற்போது அதிலிருந்து மீண்டு, தான் நடித்து வந்த மலையாளப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து முடித்துள்ளார்.
நடிகர் துல்கர் சல்மானுக்கு கொரோனா பாசிடிவ் என நேற்று அவர் மூலமாகவே அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது
அதேபோல சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கடைசி ஐந்து போட்டியாளர்களில் ஒருவராக தேர்வான நடிகை பாவனிக்கும் தற்போது கொரோனா பாசிட்டிவ் என செய்தி வெளியாகியுள்ளது.
ஒருபக்கம் இப்படி இளம் நட்சத்திரான்கள் இந்த மூன்றாவது அலை மூலம் பரவும் கொரோனா தொற்றுக்கு ஆளாவது வருத்தம் தான் என்றாலும், அவர்கள் விரைவிலேயே அதன் பாதிப்பிலிருந்து மீண்டு குணம் அடைந்து வருகிறார்கள் என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சியே.