விஜய்சேதுபதி நடித்த புரியாத புதிர் மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய படங்களை இயக்கியவர் ரஞ்சித் ஜெயக்கொடி. தற்போது விஜய்சேதுபதி சந்தீப் கிஷன் இணைந்து நடிக்கும் மைக்கேல் என்கிற படத்தை இயக்குகிறார். சந்தீப் கிஷன் ஜோடியாக திவ்யன்ஷா கௌசிக் நடிக்கிறார்.
சமீபகாலமாக நடிப்பு பக்கம் தனது கவனத்தை திருப்பியிருக்கும் இயக்குனர் கவுதம் மேனன் இந்தப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இந்தநிலையில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை வரலட்சுமி சரத்குமார் ஒப்பந்தமாகியுள்ளார்.
ஏற்கனவே விஜய்சேதுபதி நடித்த விக்ரம் வேதா படத்தில் வரலட்சுமி நடித்திருந்தாலும் அதில் அவர் கதிருக்கு ஜோடியாகத்தான் நடித்திருந்தார். அதனால் இந்தப்படத்திலாவது அவர் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பார் என நம்பலாம்.
பான் இந்திய திரைப்படமாக உருவாகும் இந்தப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் விதமாக உருவாகி வருகிறது.