இன்ஸ்டாகிராமில் தினசரி மாலை நான்கு மணியானால் டான் என ஒரு நடன வீடியோவை அப்லோட் செய்து ரசிகர்களின் மனதில் டவுன்லோட் ஆனவர் ஷிவானி நாராயணன். கடந்த பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இன்னும் பிரபலம் ஆனா ஷிவானி அதன்பிறகு சினிமா வாய்ப்புக்காக காத்திருந்தார். அதனால் தேவந்த சின்னத்திரை வாய்ப்புகளையும் தவிர்த்து வந்தார்.

அதற்கேற்றவாறு கமலின் விக்ரம் படத்திலும், பொன்ராம்-விஜய்சேதுபதி படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இருந்தாலும் பம்பர் பரிசு அடித்தது போல தற்போது, பம்பர் என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஷவானி.

இந்தப்படத்தில் ஜீவி பட நாயகன் வெற்றி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு இணையான முக்கிய வேடத்தில் ஹரீஷ் பெராடி. நடிக்கிறார். செல்வகுமார் இந்தப்படத்தை இயக்குகிறார்.

கேரள பம்பர் லாட்டரி தான் இப்படத்தின் கதைக்களம் என்பதால் இதன் முதல் கட்ட படப்பிடிப்பை எருமேலியில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பெருவழிப்பாதை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கேரள அரசின் உரிய அனுமதியுடன் நடத்தி முடித்துள்ளனர்.. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கி பிப்ரவரி மாதம் நிறைவடைய இருக்கிறதாம். இதில் சில முக்கிய காட்சிகள் தூத்துக்குடியில் படமாக்கப்படவுள்ளன