லிங்குசாமி இயக்கிய ரன் படம் மூலமாக தமிழ் சினிமாவில் தனது ரன்னிங் ரேஸை ஆரம்பித்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். தனது அழகு கொஞ்சும் நடிப்பால், கன்னக்குழி விழும் அழகால் ரசிகர்களை தன்பக்கம் வசியப்படுத்திய மீரா ஜாஸ்மின், சண்டக்கோழி படம் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார்.
தொடர்ந்து படங்களில் நடித்துவந்த மீரா ஜாஸ்மின் ஒருகட்டத்தில் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு கொஞ்சகாலம் ஒதுங்கி இருந்தார்.. நடிப்பு திறமை கொண்டவர்களை, அவர்களே ஒதுங்கி இருந்தாலும் நல்ல கதைகள் மீண்டும் கைபிடித்து இழுத்து வந்து விடுவதைத்தான் நாம் பலமுறை பார்த்துள்ளோமே.. அந்தவகையில் தற்போது மலையாளத்தில் சத்யன் அந்திக்காடு இயக்கிவரும் மகள் என்கிற படத்தில் நடிகர் ஜெயராமுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் மீரா ஜாஸ்மின்.
அதுமட்டுமல்ல, இந்த புத்தாண்டில் புதியதொரு துவக்கமாக சமூக வலைதளத்தில் அடியெடுத்து வைத்துள்ள மீரா ஜாஸ்மின், தற்போது இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கு ஒன்றை துவங்கியுள்ளார் மீரா ஜாஸ்மின் ரசிகர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதற்காகவே இன்ஸ்டாகிராமில் நுழைந்துள்ளதாக கூறியுள்ளார் மீரா ஜாஸ்மின்.
தற்போது மீண்டும் சில தமிழ் படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் மீரா ஜாஸ்மின். விரைவில் அவர் நடிக்கவுள்ள படங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவுள்ளது.