சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ படத்தின் ரிலீஸ் அப்டேட் இன்று மாலை வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளனர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர்’ திரைப்படம் உருவாகியுள்ளது. நடிகை பிரியங்கா அருள் மோகன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

டாக்டர் படத்திற்கு கோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. டாக்டர் மார்ச் மாதமே வெளியாவதாக இருந்தது. ஆனால் தேர்தல் மற்றும் கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் மே 13-ம் தேதி ரம்ஜான் தினத்தில் படம் வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதுவும் நடக்கவில்லை. இப்படியாக டாக்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிபோய்க்கொண்டே இருக்கிறது.
இதற்கிடையில் டாக்டர் படத்தின் ரிலீஸ் குறித்து பல்வேறு வதந்திகளும் பரவ ஆரம்பித்தன. இதையடுத்து டாக்டர் படத்தின் ரிலீஸ் அப்டேட் விரைவில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில் படத்தின் ரிலீஸ் அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் சிவகார்த்திகேயன் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ படத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து அறிமுக இயக்குனர் அசோக் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.