நடிகை மீனா தனது மகள் நைனிகாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர அவை வைரலாகி வருகின்றன. அட்லி இயக்கத்தில் விஜய் கதாநாயகனா நடித்து கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் தெறி. இந்தப் படத்தில் மீனாவின் மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். முதல் படத்திலேய அனைவரையும் கவர்ந்தார்.
இதனையடுத்து அவர் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் நடித்தார். நடிகை மீனாவும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை மீனா தனது பிறந்த நாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நைனிகாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
தெறி படம் வெளியாகி 5 வருடங்கள் தான் ஆகிறது. இந்த 5 வருடங்களில் நைனிகா நன்றாக வளர்ந்துவிட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ஸ்ரீதேவி விஜயகுமார், கே.எஸ்.ரவிக்குமாரின் மாலிகா உள்ளிட்ட பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.