பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் தமிழில் அருந்ததி, சந்திரமுகி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கொரோனா பேரிடர் காலத்தில் சோனு சூட் பொதுமக்களுக்கு பலவிதங்களில் உதவியுள்ளார்.பல்வேறு மாநிலத்திலிருந்து சிக்கிக்கொண்ட ஊழியர்களை அவரவர் சொந்த ஊருக்கு செல்ல பேருந்து ஏற்பாடு செய்து அவர்களை சொந்த ஊருக்கு பத்திரமாக அனுப்பினார்.
அதேபோல் வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட இந்தியாவை சேர்ந்தவர்களையும் விமானம் மூலம் இந்தியாவிற்கு வரவழைத்தார். இப்படி கொரோனா காலத்தில் சோனு சூட் பல நல்ல விஷயங்களை செய்துள்ளார். அத்துடன் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி மூலம் நடிகர் சோனு சூட் களமிறக்கப்படுவார் என்று செய்திகள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் நடிகர் சோனு சூட் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் மும்பையில் அவருக்கு சொந்தமான ஆறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வெளிநாடுகளில் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது கிடைத்த நன்கொடைகளை சோனு சூட் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.