V4UMEDIA
HomeNewsKollywoodசாந்தனு நடிக்கும் 'இராவண கோட்டம்' படப்பிடிப்பு நிறைவு!

சாந்தனு நடிக்கும் ‘இராவண கோட்டம்’ படப்பிடிப்பு நிறைவு!

சாந்தனு நடிப்பில் உருவாகி வரும் ராவண கோட்டம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. 

‘மதயானைக் கூட்டம்’ படம்  மூலமாக தென்தமிழகத்தின் வாழ்வியல்முறைகளை அழுத்தமாக பதிவு செய்தவர் அறிமுக இயக்குனர் விக்ரம் சுகுமாரன். தற்போது  7 ஆண்டுகள் சாந்தனு இயக்கத்தில் ‘இராவண கோட்டம்’ படத்தை இயக்கி வருகிறார்.  இந்தப்படத்தை  கண்ணன் ரவி தயாரித்து வருகிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். நடிகர் பிரபு இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இந்தப் படம் முதற்கட்டப் படப்பிடிப்புடன் நிறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து  ‘வானம் கொட்டட்டும்’, ‘மாஸ்டர்’ என இதர படங்களில் பிஸியானார் சாந்தனு. எனவே அந்தப் படம் கைவிடப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் படக்குழுவோ, இந்தப்படத்தின் கதை தட்பவெப்பநிலையைப் பொறுத்தது என்றும், வருடத்துக்கு 3 மாதங்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த முடியும் என்றனர். இந்நிலையில் மீண்டும் இராவண கோட்டம் படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு தற்போது படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. 

இதையடுத்து படப்பிடிப்பு நிறைவை படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். “வெற்றிகரமாக “இராவண கோட்டம்”படப்பிடிப்பு நிறைவடைந்தது,உறுதுணையாக இருந்த அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றி.” என்று இயக்குனர் விக்ரம் சுகுமாரன் தெரிவித்துள்ளார். 

Most Popular

Recent Comments