V4UMEDIA
HomeNewsKollywoodகும்கி பட இயக்குநரின் அடுத்த படத்தில் கதாநாயகனாகும் 'குக் வித் கோமாளி' அஸ்வின்?

கும்கி பட இயக்குநரின் அடுத்த படத்தில் கதாநாயகனாகும் ‘குக் வித் கோமாளி’ அஸ்வின்?

காடன் படத்துக்குப் பிறகு இயக்குநர் பிரபு சாலமன் இயக்கும் படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற அஸ்வின் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்து வந்தவர் அஸ்வின். மேலும் சில குறும்படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். இந்த நிலையில் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். 

அங்கு தனது இயல்பான நடவடிக்கையால் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார். அவருக்கென ஒரு பெரும் ரசிகர் பட்டாளம் உருவானது.  இதனையடுத்து தற்போது அவர் நடனமாடிய தனிப் பாடல்கள் யூடியூபில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. தற்போது அவர் என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் என்ன சொல்ல போகிறாய் படத்துக்குப் பிறகு அவர் பிரபு சாலமன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் கோவை சரளா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் நிவாஸ் கே பிரசன்னா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். வருகிற அக்டோபர் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது. 

Most Popular

Recent Comments