V4UMEDIA
HomeNewsKollywoodஅக்டோபர் 1 இல் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் 'ருத்ர தாண்டவம்'.5

அக்டோபர் 1 இல் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் ‘ருத்ர தாண்டவம்’.5

ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகியுள்ள ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.  

‘திரௌபதி’ படத்தின் மூலம் மக்களின் கவனம் ஈர்த்த இயக்குனர் மோகன் ஜி அதையடுத்து ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் கதாநாயகனாக நடித்துள்ளனர். திரௌபதி படத்தை அடுத்து இந்தக் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். இந்தப் படத்தில் சீரியல் நடிகை தர்ஷா குப்தா சினிமாவில் கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் தம்பி ராமையா, ராதா ரவி, மாளவிகா அவினாஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். 

சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ருத்ர தாண்டம் திரைப்படம் சாதியின் பெயரால் நடக்கும் வன்கொடுமை என்ற கதைக்களத்தில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தைப் பார்த்த சினிமா வட்டாரத்தினர் சிலர் படத்தில் நிறைய சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 

தற்போது ருத்ர தாண்டவம் படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. வரும் அக்டோபர் மாதம் 1-ம் தேதி படத்தைத் தியேட்டரில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி விடுமுறை சனிக்கிழமை வருகிறது. எனவே படத்தை அக்டோபர் 1-ம் தேதி வெளியிடும் போது நல்ல வசூல் கிடைக்கும் என்பதால் படத்தை அப்போது வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Most Popular

Recent Comments