சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் தற்போது அட்லீயிடம் இணை இயக்குனராக இருந்த சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ படத்தில் நடித்து வருகிறார். ப்ரியங்கா அருள் மோகன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். சூரி, சிவாங்கி, காளி வெங்கட், முனீஸ்காந்த், சமுத்திரக்கனி ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர்.
அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனின் SK Productions நிறுவனம் படத்தைத் தயாரிக்கின்றனர். லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் வெளியிட உள்ளனர்.சமீபத்தில் சிவகார்த்திகேயன் டான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கான போட்டோஷூட்டில் கலந்துள்ளார். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. எனவே டான் படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பும் அடுத்து என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் அசோக் என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.