அறிமுக இயக்குனர் வினீத் என்பவர் இயக்கத்தில் கவின் நடிப்பில் லிப்ட் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார். ஈகா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஹேப்ஸி இப்படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படத்திற்கு மைக்கேல் பிரிட்டோ இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை Ekaa Entertainment நிறுவனம் தயாரித்துள்ளனர். லிப்ட் படத்தின் தியேட்டர் உரிமையை லிப்ரா ப்ரொடக்ஷ்ன்ஸ் சார்பாக ரவீந்தர் சந்திரசேகரன் வாங்கியிருந்தார்.இந்நிலையில் தற்போது லிப்ட் படத்தின் தியேட்டர் உரிமைக்காக லிப்ரா ப்ரொடக்ஷ்ன்ஸ் நிறுவனத்திடம் போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக Ekaa Entertainmen நிறுவனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். மேலும் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்தரசேகரனிடம், LIFT தமிழ் திரைப்படத்திற்கு சம்பந்தமான எந்த ஒரு காப்புரிமமும் இல்லை என்றும் தெரிவித்திருந்தனர்.
தற்போது லிப்ரா ப்ரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் இந்த விவகாரம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
“Ekaa Entertainment நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட்- திரைப்படத்தின் தமிழ்நாடு உரிமையை எனது லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் செய்தது. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளது போல் 50% முன்பணம் செலுத்தியுள்ளோம். மீதி 50% தொகை படத்தின் வெளியீட்டிற்கு முன் செலுத்தவேண்டும் என ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலைக்குப் பின் தியேட்டர்கள் திறந்தவுடன் அக்டோபரில் படத்தை தியேட்டரில் வெளியிடலாம் என முடிவு செய்து கடந்த ஒரு மாதமாக தயாரிப்பாளரை தொடர்புகொள்ள முயற்சித்து வருகிறோம்.ஆனால் அவர் எங்கள் அழைப்புகளை எடுப்பதில்லை. இது சம்பந்தமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளோம்.
சங்கத்தில் இருந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோதும் “லிப்ட்” பட தயாரிப்பாளர் எந்த பதிலும் அளிக்கவில்லை. தற்போது “லிப்ட்” பட தயாரிப்பாளர் லிப்ரா புரொடக்சன்ஸ் உடன் செய்த ஒப்பந்தம் முறித்துகொள்ளப்பட்டது என தானாகவே ஒரு வேடிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளார். ‘லிப்ட்’ படத்தின் தமிழ்நாடு தியேட்டர் வெளியீட்டு உரிமையை லிப்ரா புரொடக்சன்ஸ் நிறுவனத்திடம் தான் உள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை தெரியப்படுத்தி கொள்கிறோம். நன்றி இப்படிக்கு LIBRA PRODUCTIONS” என்று தெரிவித்துள்ளனர்.