V4UMEDIA
HomeNewsKollywood17 வயதில் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து நமீதா செய்த பதிவு !

17 வயதில் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து நமீதா செய்த பதிவு !

நடிகை நமீதா தனது 17 வயதில் எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, இது குறித்து தகவலை பகிர்ந்துள்ளார். 

தமிழில் விஜயகாந்த், பிரபு தேவா இணைந்து நடித்த ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுமகானவர் நமீதா. தொடர்ந்து ‘மகா நடிகன்’, ‘ஏய்’, ‘பில்லா’, ‘நான் அவன் இல்லை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 

இவரது நடிப்பில் ‘பொட்டு’ என்ற படம் கடைசியாக வெளியாகியிருந்தது. தற்போது தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தமிழ் பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் ஒறு புகைப்படம் பகிர்ந்து, ”இது எனது 17 வயதில் எடுக்கப்பட்டது. மும்பையில் பெரிய கனவுகளுடன் இருந்தேன். 2000 ஆம் ஆண்டு பிரபல நடிகர் பொம்மன் இரானி இந்தப் புகைப்படத்தை எடுத்தார். இந்தப் புகைப்படம் நான் ஃபெமினா மிஸ் இந்தியா 2001-ல் வெல்லக்காரணமாக அமைந்தது”  என்று குறிப்பிட்டுள்ளார்.

Most Popular

Recent Comments