மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான ‘கர்ணன்’ திரைப்படத்தில் நடித்த குதிரை ஒன்று எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தில் அலெக்ஸ் என்ற குதிரை மீது தனுஷ் வரும் காட்சிகள் அவ்வப்போது வரும் என்பதும் தெரிந்ததே. குதிரையில் கம்பீரமாக வரும் தனுஷின் இந்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனுஷ் வந்த குதிரையின் பெயர் அலெக்ஸ் என்றும் அந்த குதிரை திடீரென இறந்து விட்டது என்றும் மாரி செல்வராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். குதிரையின் இறப்புக்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து அலெக்ஸ் என்ற குதிரையின் மறைவிற்கு ரசிகர்களும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். கர்ணன் படத்தில் நடந்த நடித்த குதிரையின் மறைவு மாரி செல்வராஜ் மற்றும் என்று படக்குழுவினர் அனைவருக்குமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.