அட்லி இயக்கும் படத்தில் ஷாருக்கானுடன் மீண்டும் இணைந்து யோகி பாபு நடிக்கவிருக்கிறார்.
அட்லி தற்போது ஷாருக்கான் நடிக்கும் ஹிந்திப் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் புனேவில் துவங்கியது. இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
மேலும், நடிகை சான்யா மல்ஹோத்ரா, பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்க, மெர்சல், பிகில் படங்களின் ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் யோகி பாபு நடிக்கிறார். படம் முழுக்க அவருக்கு ஷாருக்கானுடன் வரும் வேடம். ஏற்கனவே சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் யோகி பாபு சிறிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் ஹிந்தி மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளியாகவுள்ளது. தமிழ் பதிப்பில் மட்டும் யோகி பாபு நடிக்கிறாரா அல்லது மற்ற மொழி பதிப்பிலும் நடிக்கிறாரா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.