ஊடகங்களை விமர்சிக்கும் விதமாக நடிகை சமந்தா வெளியிட்ட மீம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார் சமந்தா. பின்னர் சமூக வலைதளங்களில் நாக சைதன்யாவின் குடும்பப் பெயரான அக்கினேனியை தனது பெயரின் பின்னால் சேர்த்துக்கொண்டு சமந்தா அக்கினேனி ஆனார்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தனது பெயரை ஆங்கில எழுத்தான எஸ் என்று மட்டும் மாற்றினார்.

இதனையடுத்து நடிகை சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் கருத்து வேறுபாடு, இருவரும் விவாகரத்து செய்யவிருக்கிறார்கள் என செய்திகள் வெளியாகின.
ஆனால் இதுகுறித்து சமந்தாவும், நாக சைதன்யாவும் வெளிப்படையாக எதுவும் கூறவில்லை. இந்த நிலையில் முதன்முறையாக சமந்தா ஊடகங்களை விமரிசிக்கும் விதமாக மீம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த மீமில் நாய் ஒன்று ஆக்ரோஷமாக இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து ஊடகங்கள் குறித்து கூறப்படுவது என்றும், நாய்கள் அமைதியாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து ஊடகத்தின் உண்மை நிலை என்றும் குறிப்பிட்டுள்ளார். இது விவாகரத்து என்ற செய்தி வெளியிட்ட ஊடகங்களை விமரிசிக்கும் விதமாக அமைந்துள்ளது.