V4UMEDIA
HomeNewsKollywood‘பிக் பாஸ் 5ல் ஜி.பி.முத்து? வைரலாகும் புகைப்படம்!

‘பிக் பாஸ் 5ல் ஜி.பி.முத்து? வைரலாகும் புகைப்படம்!

பிக்பாஸ் செட்டுக்கு வெளியே இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தான் 5 வது சீசனில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளார் டிக் டாக் பிரபலம் ஜி.பி முத்து.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடத்தப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சி தமிழில் நான்கு சீசன்களை கடந்துள்ளது. இந்த நிலையில், 5ஆவது சீசன் நிகழ்ச்சியின் முன்னோட்டத்தை விஜய் டி.வி வெளியிட்டிருந்தது.

கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ‘ஆரம்பிக்கலாமா…’ என்பது போல அதன் ப்ரோமோ வெளியாகி இருந்தது. ஐந்தாவது சீசனில் பங்கேற்பதற்கான ஆட்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் அக்டோபர் 3ஆம் தேதி நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. இம்முறை சுனிதா, குக் வித் கோமாளி கனி, சகிலா மகள் மிளா, பவானி ரெட்டி, சரவணன் மீனாட்சி ரட்சிதா உள்ளிட்ட பலர் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் டிக் டாக் மூலம் பிரபலமான ஜி.பி முத்து பிக் பாஸ் சீசன் 5 ல் கலந்து கொள்வதை உறுதி படுத்தியுள்ளார். பிக்பாஸ் வீட்டின் முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது. அதனை ரீட்வீட் செய்து இருக்கும் நடிகர் சதீஷ், ‘அவரை கடிதங்களை மட்டும் படிக்க விட்டுவிடாதீர்கள். என்ன கேம் நடத்துறீங்க.. செத்த பயலுகளா நாட பயலுகளா..’ என காமெடியாக பதிவிட்டுள்ளார்.

Most Popular

Recent Comments