நடிகை ஜோதிகா அதிகாரப்பூர்வமாக இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் 90-களில் இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. ஜோதிகா நடிகர் சூர்யாவை 2006-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு சில படங்களில் நடித்த ஜோதிகா அதையடுத்து சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.
பின்னர் சில ஆண்டுகளுக்குப் பிறகு ’36 வயதினிலே’ படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். தற்போது பெண் மையக் கதாபாத்திரங்கள் கொண்ட படங்களில் மட்டுமே ஜோதிகா நடித்து வருகிறார். ஜோதிகா நடிப்பில் கடைசியாக ‘உடன்பிறப்பே’ திரைப்படம் உருவாகியுள்ளது.
ஜோதிகா பல ஆண்டுகளாக எந்தவொரு சமூக வலைத்தளங்களிலும் கணக்கு துவங்காமல் இருந்தார். இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் தற்போது அதிகாரபூர்வமாக கணக்கு துவங்கியுள்ளார்.
“எல்லோருக்கும் வணக்கம்! சமூக ஊடகங்களில் முதல் முறையாக! எனது லாக்டவுன் நாட்குறிப்புகளிலிருந்து நிறைய தகவல்களைப் பகிர்ந்து கொள்ள கணக்கு துவங்கியுள்ளேன்” என்று தெரிவித்ததுடன் இமாலய மலைகளுக்கு விசிட் அடித்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து அவரது கணவரும், நடிகருமான சூர்யா, ஜோதிகாவின் போஸ்டை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஷேர் செய்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.